சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும், ஒரு கிராம் ரூ. 14,100-ககும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குரைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,060-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







