கூகுள் பே மூலம் சாராயம் வாங்கினால் ஆஃபர்; பொதுமக்கள் அதிர்ச்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூகுள் பே மூலம் இரண்டு லிட்டர் கள்ளச்சாராயம் வாங்கினால் அரை லிட்டர் இலவசம் என புதிய ஆஃபரை கள்ளச்சாராய வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூகுள் பே மூலம் இரண்டு லிட்டர் கள்ளச்சாராயம் வாங்கினால் அரை லிட்டர் இலவசம் என புதிய ஆஃபரை கள்ளச்சாராய வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பிரம்மகுண்டம் கிராமத்தில் துரைசாமி மகன் வெங்கடேசன் என்பவர் தொடர்ந்து அப்பகுதியில் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வருகிறார். கள்ளச்சாராய வியாபாரியான வெங்கடேசன் மது பிரியர்களின் கவனத்தை ஈர்க்க புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்திலேயே முதன்முதலாக ஆன்லைன் மூலம் கள்ளச்சாராய வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில், கூகுள் பே மூலம் 2- லிட்டர் கள்ளச்சாராயம் வாங்குபவர்களுக்கு அரை லிட்டர் இலவசம் என்று அறிவித்திருந்தார். இதனால், வீட்டில் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதி வருகிறது.

கள்ளச்சாராயம் வியாபாரத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மது பிரியர்களுக்கு ஒரு கள்ளச்சாராய வியாபாரி ஆஃபர்களை அறிவித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.