முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர், பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ், நக்கீரன் அமர்வு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர், தொழில் செய்ய தடை விதித்தும், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ள உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jayasheeba

விமரிசையாக நடைபெற்ற சீர்காழி புதன்பகவான் தெப்போற்சவம்!

Web Editor

இரண்டரை வயது குழந்தையை அடித்து கொன்ற பெரியப்பா கைது

EZHILARASAN D