எந்த வடிவில் கொரோனா வந்தாலும், அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக எம்எல்ஏ. விஜயபாஸ்கர் புதிய வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கொரோனா உருமாற்றத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், எந்த வடிவில் கொரோனா வந்தாலும், அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.