விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்திற்கு தணிக்கை வழங்ககோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.
இதனிடையே தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போதுவரை படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் ‘ஜன நாயகன்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ‘ஜன நாயகன்’ படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருப்பதாவது: ‘ஜன நாயகன்’ படத்தை யாரும் பகிர வேண்டாம். ஒவ்வொரு காட்சிகளும் பலரின் கனவை சுமந்து வருகிறது. அனைத்து தரப்பினருலும் படக்குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







