புதுச்சோியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி!

புதுச்சேரி ஸ்ரீசுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில், கிருஷ்ண  ஜெயந்தியையொட்டி நடைபெற்ற உறியடி  நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர். புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில் 88-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா…

புதுச்சேரி ஸ்ரீசுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில், கிருஷ்ண  ஜெயந்தியையொட்டி நடைபெற்ற உறியடி  நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தரவதன கிருஷ்ணர்
ஆலயத்தில் 88-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி ஆலயத்தில் உள்ள சுந்தர விநாயகர், பெரியபாளையத்தம்மன், சுந்தரசுப்ரமணியருக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஸ்ரீ சுந்தரவதன கிருஷ்ணருக்கு மகா திருமஞ்சனம் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வான உறியடி நிகழ்வான  நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு உறியடி அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு உறியடித்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.