சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல்போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு 8 மணி முதல் பல்வேறு
இடங்களில் மழை பெய்தது அதே போல் சென்னை புறநகர் பகுதியில் தாம்பரம்
குரோம்பேட்டை பல்லாவரம் முடிச்சூர் பெருங்களத்தூர் வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய
வளாகத்தில் இருந்து வெளியேறிய மழை நீர் வண்டலூர் ஜி.எஸ்.டி.சாலையில்
தேங்கியது. ஜி.எஸ்.டி. சாலையில் 4 அடிக்கும் மேல் மழை நீர் தேங்கியதால் அந்த
வெளியாக வெளி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள் கடும் சிரம்மத்திற்கு
உள்ளாகின.
குறிப்பாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் ஊர்ந்து சென்றன. கடலில் கப்பல் செல்வது போல் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் மிதந்து சென்றன. ஒரு சில போக்குவரத்து காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை ஒரு ஜே.சி.பி. இயந்திரம், ஒரு
மோட்டார் வைத்து மட்டுமே அகற்றுவதால் மழை விட்டும் நீண்ட நேரம் போக்குவரத்து
பாதிப்பு இருந்தது.
ரூபி.காமராஜ்.







