முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொங்கல் பண்டிகைகாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் வரும் 17ம்தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி போகிப் பண்டிகையில் தொடங்கி, 17- ஆம் தேதி காணும் பொங்கல் வரை கொண்டாடப்படுகிறது. வேளாண்மை, வேளாண் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இயற்கைக்கு நன்றி தெரிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்காக ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக சார்பில், சிறப்பு சந்தை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சந்தை இன்று நள்ளிரவு (ஜன 10) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

10 நாட்கள் வரை நடைபெற உள்ள, இந்த சிறப்பு சந்தையில் பொங்கலுக்கென்றே அறுவடை செய்யப்படும் செங்கரும்பு , வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து மற்றும் மண்பானை, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதற்காக சிறப்பு சந்தையில் கடை வைக்கவும், சரக்குகளை ஏற்றிக் கொண்டு மார்க்கெட்டில் நுழையும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலம் கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக சார்பில் நடத்தப்படும்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பு சந்தையை அங்காடி நிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்றும், ஏலத்தில் உரிமம் இல்லாத வெளியாட்களுக்கு ஏலம் மார்க்கெட்டில் கடை நடத்த அனுமதி தரக்கூடாது என்றும், மார்க்கெட்டில் உரிமம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து ஏலம் தரவேண்டும் என்றும் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் பொங்கல் சிறப்பு சந்தை இன்று நள்ளிரவு முதல் தொடங்கிய நிலையில் கரும்பு மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கட்டு செங்கரும்பு 100 முதல் 200 வரை விற்பனைனை செய்யப்படுகிறது. சந்தைக்கு தொலைவில் மக்களுக்கு தெரியாமல் இருப்பதால் கரும்பு விற்பனை குறைவு என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

விற்பனைக்காக பொருட்களை மார்க்கெட் உள்ளே கொண்டு வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் உட்புறம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வாகனங்களுக்கு 2000 வரை பார்க்கிங் சார்ஜ் வசூல் செய்வதாகவும், கரும்பு வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வாகனங்களுக்கு 200 ரூபாய் வரை பார்க்கிங் சார்ஜ் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

செப்டம்பர் 7ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி முக்கிய ஆலோசனை?

Web Editor

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Web Editor

கொரோனா 2ம் அலை பரவ தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது: உயர்நீதிமன்றம்

EZHILARASAN D