பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தீப்பந்தம் பிடித்து பக்தர்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தமிழகத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக கருதப்படும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலின் பங்குனித்திருவிழா
கடந்த மாதம் 19ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய நிலையில் மறுநாள்
அக்கினிப்பால்குட விழா நடைபெற்றது.
இதன் பின்னர் கடந்த 26ம் தேதி சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டு அன்று முதல் தினசரி மண்டகப்படிதாரர்கள் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் சுவாமி வீதி விழாவும், பக்தர்களால் தூக்கிவரப்பட்ட அம்மன் உற்சவர் சிலையை ரதத்தில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலாவும் நடைபெறும்.
அப்போது நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ரதத்தின் இருபுறமும் நின்று தீப்பந்தம் பிடித்து கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
—-ரூபி.காமராஜ்







