கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழக எல்லைப் பகுதியில் கொட்ட வந்த மூன்று டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை தமிழக விவசாயிகள் சிறைபிடித்தனர்.
தமிழக கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகேயுள்ள இரட்டைமடை தோட்டம் பகுதியில், கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்கான தோட்டம் உள்ளது. இங்கு கடந்த சில வருடங்களாக, இரவு நேரங்களில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அதிக அளவில் லாரிகள் வந்ததால் அப்பகுதி விவசாயிகள் சந்தேகமடைந்து பார்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது கேரளாவில் இருந்து வந்த மூன்று டிப்பர் லாரிகள், மருத்துவ கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்த விவசாயிகள், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஆனைமலை காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதற்குள் அதில் வந்த 10 பேர் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
