திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியதை அடுத்து, தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே கொரோனா முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியிருந்தார் துரைமுருகன். இந்த நிலையில் இன்று இரண்டாம் தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
83 வயதான துரைமுருகன் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். கொரோனா பரவலைத் தொடர்ந்து, வெளியிடங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்பாக முகத்தை முழுவதும் மூடும் கவசத்தை அணிந்துகொண்டே சென்றுவந்தார் துரைமுருகன். சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட அவர், கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தீவிரப் பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில்தான் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. துரைமுருகனுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததால் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதுபோலவே திமுக முன்னாள் அமைச்சரும், குறிஞ்சிபாடி தொகுதி திமுக வேட்பாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.