தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தவெகவினர் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூடாது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் விஸ்வநாதன், ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரனா மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், “கரூர் உயிரிழப்பு விவகாரத்தில் மக்களிடையே ஒரு கருத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. குறிப்பாக கரூர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை நிறைவையில் இருக்கக்கூடிய நிலையில் அது தொடர்பாக கருத்துக்களை பொது வழியில் தெரிவித்து வருகிறார்கள் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும்.
நீதிபதிகள்:
முதலமைச்சருக்கு நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
திமுக தரப்பு:
தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தினுடைய உத்தரவை மீறி அவதூறு என்பது பரப்பப்பட்டு வருகிறது. எனவே இந்த விவகாரத்தை பொருத்தவரை வழக்கு விசாரணையில் இருக்கும் போது பொதுவெளியில் வெவ்வேறு கருத்துக்களை பரப்பி வருபவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கரூர் துயர சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடிய முதலமைச்சர் உள்ளிட்ட நபர்கள் நிவாரணங்களை வழங்குவது போன்ற பல்வேறு விஷயங்களை செய்கிறார்கள். ஊடகங்களுக்கு வெளிப்படையாக பேட்டிகளை கொடுக்கிறார்கள். இவையெல்லாம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
நீதிபதிகள்:
முதல்வர் விஜய்யை குற்றம் சாட்டப்பட்ட நபர் என மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் கூறியபோது அதற்கு கடுமையான மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் முந்தைய திமுக அரசியல் கூட பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் விஜய் அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை. எங்கும் அவர் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை. தயவு செய்து ஆவணங்களை சரியாக படித்து பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள்.
உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை அமைச்சர்களோ, முதலமைச்சராக தெரிவித்தால் அதற்கு சிபி விசாரணையை எப்படி நீங்கள் கோர முடியும்? அவ்வாறு கருத்துக்களை வெளியில் பரப்பியிருந்தாலோ பேசி இருந்தாலும் அவமதிப்பு வழக்கு தானே தொடர முடியும் என்று தெரிவித்தார்.
நீதிபதிகள்:
கரூர் வழக்கில் முதல்வர் விஜய் குற்றவாளி என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கை இப்பொழுதே தள்ளுபடி செய்ய வேண்டி இருக்கும். உங்களுடைய சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்.
தி.மு.க தரப்பு:
நாங்கள் முழு சுதந்திரத்துடன் வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




