நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படம் படம் ஒன்றில் நடித்து வருகிறார். ‘ஓம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தின் புரொமோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ் அடுத்ததாக லப்பர் பந்து இயக்குநர் தமிழரன், மாரி செல்வராஜ் ஆகியோரது திரைப்படங்கலில் நடிக்க உள்ளார். மேலும் இளையராஜா மற்றும் அப்துல் கலாம் ஆகியோரது பயோபிக்குகளிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பாதி மறைந்த நிலையில் ‘DxV’ என்றும் 10.07.2026 என்றும் குறிப்படப்பட்டு இருந்தது.
இந்த போஸ்டரை குறித்து டீகோட் செய்யும் ரசிகர்கள் ‘DxV’ என்பது தனுஷ் நடிக்க உள்ள புதிய திரைப்படம் ஒன்றினை வெங்கட் பிரவு இயக்க உள்ளதை குறிப்பாதாகவும் அப்படத்தின் அப்டேட் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் ‘DxV’ முழுமையாக காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில், ‘பணிந்தவரை விட்டு வைப்பான், பகைத்தவரை நட்டு வைப்பான்” என்றும் கூறப்பட்டுள்ளது.




