எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு…!

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவர் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா…? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்

மேலும் அவர் போதுமான மருத்துவ உபகரணங்கள் உள்ளதா…? என்பது குறித்தும் மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் மருத்துவமனை முதல்வர் மற்றும் துறையின் செயலரிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் விஜய், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக நேற்று முதலமைச்சர் விஜய், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.