காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 30000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில்…

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 30000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கர்நாடக அரசு கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

கர்நாடகா அணைகளில் தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் இருந்தாலும், தமிழகத்துக்கு நீரை திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக, கன்னட அமைப்புகள் இரு முறை முழு அடைப்பு போராட்டம் நடத்தின.

இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, மத்திய அரசு மற்றும் கர்நாடகாவை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.திருவாரூர் மாவட்டம் முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுமார் 8000 உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்திற்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், ஆதரவு தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.