விஜய் – ஷாருக்கானை வைத்து “ரூ.3000 கோடி வசூல் ஈட்டும் படத்தை இயக்க விரும்புகிறேன் – இயக்குநர் அட்லி

“ரூ.3000 கோடி வசூல் ஈட்டும் படத்தை இயக்க விரும்புகிறேன் என இயக்குநர் அட்லி கூறியுள்ளார். பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர்…

“ரூ.3000 கோடி வசூல் ஈட்டும் படத்தை இயக்க விரும்புகிறேன் என இயக்குநர் அட்லி கூறியுள்ளார்.

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஷாருக் கானின் முந்தைய படமான பதான் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜவான் படத்தின் வசூல் பதான் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது. இன்று ரிலீஸாகி 19 ஆவது நாளில் ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை தொட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

26 ஆவது நாளில் 1100 கோடி ரூபாய் என்ற பென்ச் மார்க்கை தொட்டுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற சாதனையை ஜவான் படைத்துள்ளது. முதலிடத்தில் அமீர்கானின் தங்கல் திரைப்படம் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் அக்டோபர் 28 ஆம் தேதி இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தியேட்டரில் வெளியாகி 45 ஆவது நாளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அட்லி, “ரூ.3000 கோடி வசூல் ஈட்டும் படத்தை இயக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த அவர்களது படங்களை இயக்க வாய்ப்பளித்த விஜய் சார், ஷாருக்கான் சாருக்கு நன்றி, விஜய் சார், ஷாருக்கான் சார் இணைந்து நடித்தால் அந்தப்படம் ரூ.3000 கோடி வசூலிக்கும்” எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.