முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

கரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டெடுப்பு

கரூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், நஞ்சைக்காளகுறிச்சி கிராமத்தில் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் பழைய சிற்பங்கள் இருப்பத்காக தகவல் பரவியது. இதையடுத்து, குஜிலியம்பாறையை சேர்ந்த வரலாற்று ஆர்வலரும் ஆசிரியரியருமான சிவசங்கர், ஜெகதினேஷ், கரூர் சுப்ரமணியன் , தரகம்பட்டி சிவநாயனார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது, இங்கு கி.பி 950 வரை பல்லவப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. பல்லவ மன்னர்கள் பெரும்பாலோனர் தீவிர சைவ பக்தர்களாக இருந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமராவதியின் ஆற்றங்கரையின் இரு புறமும் சிவனுக்கு கோயில் எழுப்பி அவர்களின் பக்தியை வெளிப்படுத்தினர். கட்டிய கோவில்கள் அனைத்தும் கற்றளிகளாக கட்டினர். அழகான சிற்பங்களையும் செதுக்கினர். இங்கு ஆவுடையுடன் கூடிய லிங்கம் , சண்டிகேஸ்வரர், நந்தி, ஆகிய சிற்பங்கள் மட்டும் கிடைத்துள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீட மகுடமும், இரண்டு காதுகளிலும் மகர குண்டலங்களும், கழுத்தில் ஆபரணங்களும், மார்பில் முப்புரி நூலும் காணப்படுகிறது.

இந்த சிற்பத்தின் வலது கையில் மழுவோடும், இடது கையை ஊறு ஹஸ்தத்திலும் வைத்துள்ளார். ஊறு என்பது தொடை என்பதாகும். இந்த சிற்பம் 2.1/2 அடி உயரம் , 1.1/2 அடி அகலத்திலும், சிவலிங்கம் 4.4 அடி உயரத்திலும், நந்தி 2.3/4 உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. இங்கு மிகப்பெரிய சிவன் கோயில் இருந்திருக்கலாம். இங்கிருந்து நிறைய சிற்பங்கள் காணாமல் போய் விட்டது. கல்வெட்டுகள் எதுவும் கிடைக்காததால் இக்கோயில் எந்த அரசரின் கால கட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை.

ஆனால் சிற்பத்தின் அமைவை வைத்துப் பார்க்கும் போது, பல்லவர்களின் சிற்பக்கலை என உறுதியாக சொல்லலாம். மேலும் இப்பகுதியில் ஆய்வு செய்தால் இது போன்ற பல தகவல்கள் இன்னும் வெளிப்படும் என்றார். கண்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு கரூர், திருச்சி மற்றும் கோவை மாவட்ட சிவனடியார்கள் சார்பில் திருப்பணி பீடம் கட்டப்பட்டு மூன்று சிற்பங்களும் நிறுவப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் ரூ.300 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாகு!

எல்.ரேணுகாதேவி

ஊரக உள்ளாட்சி தேர்தல்; மது விற்பனைக்கு தடை

G SaravanaKumar

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

Web Editor