இந்தோனேசியாவில் 15-ம் தேதி ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை பாலி நகருக்கு செல்கிறார் என வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் வருகிற 15 மற்றும் 16-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் மோதல்கள் உள்ளிட்ட விவாதங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக நாளை பாலி நகருக்கு செல்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளகிறார் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், ஜி20 தலைவர்கள் சிலருடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேசுவார் என்றும் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பு டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியா வசம் வருவது குறிப்பிடத்தக்கது.