உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டவர் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். இவர் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபல், டாப் கன், ஜேக் ரீச்சர், கொலட்ரல், உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டாம் குரூஸின் ஆக்சன் சீன்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ’மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்’ படமானது பாக்ஸ் ஆபீசில் சக்கை போடு போட்டது. அத்துடன் டாம் க்ரூஸின் திரைத்துறை பங்களிப்புக்காக அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாம் குரூஸ் நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி ’பேர்ட்மேன் (2015)’ மற்றும் ’தி ரெவனன்ட் (2014)’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டுவின் இயக்கத்தில் டாம் குரூஸ் நடிக்க உள்ளார்.
is DIGGER: “Let’s f***ing go!”
Only in theaters October 2026. pic.twitter.com/iaHhvTgeCq
— Tom Cruise (@TomCruise) December 18, 2025
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ’டிக்கர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சாண்ட்ரா ஹல்லர், எம்மா டி’ஆர்சி, ரிஸ் அகமது , ஜான் குட்மேன், மைக்கேல் ஸ்டுல்பர்க் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படம், அக்டோபர், 2026ல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.








