லால் சலாம் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த கபில் தேவ்!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம்…

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்,  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த  ”வை ராஜா வை” என்ற படத்தையும்  இயக்கினார்.

இந்த நிலையில்,  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம்.  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இத்திரைப்படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள  இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார்.  படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில்,  கபில் தேவ் நடித்துள்ள காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

கபில் தேவ்வுடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது.  உண்மையான வசீகரன் அவர் .  மேலும் படத்தின்  இறுதி கட்ட வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.