அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்! – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 தினங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 தினங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்:“சட்டத்திற்கு கட்டுப்பட்டவன் நான்”- நியூஸ் 7 தமிழுக்கு நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி!

அப்போது அவர் கூறியதாவது:

நவம்பர் 22 ஆம் தேதி தமிழக பகுதிகளின் மீது நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று கேரள பகுதிகளில் நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றம் புதுச்சேரியில் 45 இடங்களில் கனமழையும் , 8 இடங்களில் மிக கனமழை மற்றும் 2 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது.

மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில்,  மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.  அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் பகுதியில் 37 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து, கோத்தகிரியில் 24 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

அடுத்த 3 தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னை புறநகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதனை தொடர்ந்து,  நவம்பர் 26 ஆம் தேதி தெற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, நவம்பர் 26 ஆம் தேதி  மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.