முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கனியாமூர் பள்ளி மாணவியின் செல்போன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி  மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்கள், மேஜைகள், கண்ணாடிகள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் போராட்டக்காராக்கள் அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்கினர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால் பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் 4 முறை மாணவியின் தாயார் செல்விக்கு சம்மன் அனுப்பியது.

மாணவியின் தாயார் அந்த சம்மனை பெற்றுகொண்டு செல்போனை ஒப்படைக்காத நிலையில், இந்த வழக்கானது மீண்டும் வருகின்ற பிப்ரவரி 1.2.2023 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வர உள்ளது. செல்போனை விசாரனை அதிகாரியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதால் இன்றை தினம்  மாணவியின் தாயார் செல்வி தனது வழக்கறிஞர் லூசி உடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு வருகை தந்து, செல்போனை ஒப்படைக்க மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரனை வந்தபோது, நீதிபதி புஷ்பராணி இவ்வழக்கு விசாரனை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாலும், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி விசாரனை அதிகாரிகளான சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது .

இதனை தொடர்ந்து மாணவியின் தாயார் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி செல்போனை இன்று விழுப்புரம் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தார் . மேலும் கனியாமூர் மாணவியின் வழக்கு விசாரனையில் நம்பிக்கை இல்லாததால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இவ்வழக்கு விசாரனையை மேற்கொள்ள வேண்டுமென மாணவியின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நெல்லை மாநகர திமுகவில் பகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு

Web Editor

பெற்ற குழந்தையை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற குடிகார தந்தை!

Vandhana

தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை – உ.பி. அரசு திட்டம்

EZHILARASAN D