முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி விளையாட்டு

கொட்டும் மழையிலும் நடந்து வரும் புகழ்பெற்ற தங்கானூர்  சேவல் சண்டை போட்டி

புகழ்பெற்ற திருவள்ளுர் தங்கானூர்  சேவல் சண்டை போட்டியை காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளதால் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில்
தமிழர்களின் வீரத்தினை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள்
பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் பாரம்பரியமாக சேவல் சண்டை போட்டியும் நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சேவல் சண்டை போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம் தங்காணூர் பகுதியைச் சார்ந்த தேவாரம் என்பவர் வழக்கு தொடுத்திருந்த நிலையில் ”சேவல்களை, துன்புறுத்தக் கூடாது, போட்டி நடக்கும் இடத்தில் ஒரு கால்நடை டாக்டர் இருக்க வேண்டும், சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது, காலில் கத்தி கட்டக் கூடாது,  குறிப்பிட்ட சமூகத்தை பெருமைப்படுத்தும் வகையில், எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது , அப்படி நிபந்தனைகளை மீறினால், போலீசார் சட்டப்படி நடடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த திருவள்ளூர் மாவட்டத்திற்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து சேவல் சண்டைக்கு பெயர்போன தங்கனூர் பகுதியில் தர்மபுரி,
வேலூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, பட்டுக்கோட்டை, திருநெல்வேலி
மாவட்டங்களிலும் மற்றும் ஆந்திரா கர்நாடகா மும்பை தெலுங்கானா உள்ளிட்ட
மாவட்டங்களில் இருந்து கதர், ஜாவா, நூரி, பீலா, சர்க்கா, யாக்குத் வகை சார்ந்த சண்டை சேவல்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட சேவல்கள் சண்டையிட தயாராக உள்ளன

மேலும் ஓராண்டாக வளர்க்கப்படும் சண்டைக்கோழிகள் சண்டையிட தகுதி உள்ளதா என்பதை சோதனை செய்யும் விதமாக நான்கு ஐந்து சேவல்களுடன்  சண்டையிட செய்து சிறந்த முறையில் சண்டையிடும்  சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில்  20 நாட்கள் சண்டை பயிற்சி அளிக்கப்பட்டு தயார் செய்யப்படும் சண்டைக்கோழிகள் இந்த சேவல் சண்டையில் பங்கேற்கும்.

மேலும் ஒரு வயது மற்றும் மூன்று கிலோ எடையுடன் கூடிய சண்டைக்கோழிகள்
சண்டைக்காக பதிவு செய்யப்பட்டு ரூபாய் 1000 பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு
நாள் ஒன்றுக்கு 300 முதல் 600 கோழிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சுற்றும் 20 நிமிடங்கள் சண்டை மற்றும் 20 நிமிடங்கள் ஓய்வு அளிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதற்காக 100 அரங்குகள் தயார் செய்யப்பட்டுள்ளது

தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் சேவல்களுக்கு  முதல் பரிசாக இரண்டு லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனம் மற்றும் வெள்ளி நாணயம் குக்கர் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்படுகிறது

சேவல் சண்டைகள் உயர்நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றி நடைபெறுவதை
கண்காணிக்கவும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு ஏராளமான போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில்  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்று விளங்குவது போல கோழி சண்டையில் திருவள்ளூர் மாவட்டம் தங்கனுர் கிராமம் உலக அளவில் பெயர் பெற்று விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டியானது இன்று,நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது தங்கானூர் பகுதியில் லேசான மழை பெய்து வரும் சூழலில் மழையிலும் பந்தல் அமைத்து சேவல் சண்டை போட்டிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் பதிவு செய்து போட்டியில் பங்கேற்று  வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓய்வு பெறுகிறார் சானியா

G SaravanaKumar

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

வெள்ளத்தில் சிக்கி தவித்த நாய்க்குட்டிகள்; உயிரை பணயம் வைத்து மீட்ட எலெக்ட்ரீஷியன்

EZHILARASAN D