கோவையில் உள்ள பேரூர் தமிழ் கல்லூரியின் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு கோரினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவரும், வேட்பாளருமான கமல்ஹாசன் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
பேரூர் தமிழ் கல்லூரியின் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு கோரினார். அப்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், கமலின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மதநல்லிணக்கத்திற்காக கமல் குரல் கொடுத்து வருவதாகவும் கூறினார். மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.







