திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டப்படும்: மல்லை சத்யா

திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டப்படும் என செங்கல்பட்டு தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா வாக்குறுதி அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் மதிமுக சார்பில்…

திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டப்படும் என செங்கல்பட்டு தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா வாக்குறுதி அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் வேட்பாளராக கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று அவர் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட படாளம் ,பழையனூர். என்புரம் , அரைப்பாக்கம் உள்பட 12 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய மல்லை சத்யா, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், கரும்புக்கான நிர்ணய தொகை மற்றும் கரும்புக்கு உரிய கூடுதல் விலை பெற்றுத் தரப்படும் எனவும், பாலாற்றின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சுமார் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் பட்டதும் ஒரு குடும்ப அட்டைக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரண தொகையாக வழங்கப்படும் என உறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.