“234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு” : ஸ்டாலின்

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி…

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் பின்னர் பாஜக வேட்பாளர்களாக மாறிவிடுவார்கள் என்று கூறினார். மத்திய அரசு கொங்கு மண்டலத்தின் சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு ஏதாவது உதவி செய்ததா எனக் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் சிறுகுறு தொழில்துறை முடங்கி விட்டதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அதிமுகவை மிரட்டி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக பழனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மக்கள் விடுதலைக் கட்சி வேட்பாளர் முருகவேல்ராஜன் உள்ளிட்டோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
கடந்த தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக தற்போது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தின் சுயமரியாதையைம், தன்மானத்தையும் காக்க திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் வாக்காளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.