மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், 67 வது வார்டு பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மதம் நல்லிணக்கம் இருக்காத ஊரில் சுபிட்சம் இருக்காது, வேலை வாய்ப்பு இருக்காது, ஏழ்மை தாண்டவம் ஆடும் என தெரிவித்தார். அந்த ஏழ்மையில் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்கள்தான் அரசியல்வாதிகள் என அவர் குறிப்பிட்டார். ஏப்ரல் 6-ஆம் தேதி நீங்கள் முடிவு செய்தீர்கள் என்றால் அரசியல் மாற்றம் வரும் என்றும், நேர்மையாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.







