நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, திருமண பதிவை ரத்து செய்து, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வழங்கக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ரவி மோகன் – ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இறுதி தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் அவதூறு அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ரவி மோகன், ஆர்த்தி பிரச்னைக்குக் காரணம் கெனிஷாதான் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸில்’ கெனிஷா முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார். இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து கெனிஷா இன்ஸ்டா பதிவில், நிஜமான அன்பையும், விசுவாசத்தையும் காட்ட இந்த உலகம் எனக்கு இடம் தரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள அவர், ‘இனி ரவி மோகன் உங்கள் வசம்’ என்று கூறி அவருடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக கூறினார். இந்நிலையில் ரவி மோகன் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள். இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன். என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் அப்பாவும் என் அண்ணனும் நான்கு வருடங்கள் வேலை செய்யவில்லை. இளம் வயதில் என் குடும்பத்திற்காக உழைத்தேன். என் குடும்பத்திற்காக நான் இருக்கிறேன். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை.
என்னுடைய கடந்த வாழ்க்கையில் 14 வருடம் வாழ்ந்துள்ளேன். ஃபெமினிசம் என்றால் என்ன தெரியாதா? என் படங்களில் பெண்ணின் உரிமையை பற்றி பேசுகிறேன். நான் தப்பாக பெண்களை பேசுவேனா? என் தாய் அப்படி என்னை வளர்க்கவில்லை. என்னுடைய பிள்ளையை நான் எப்படி விட்டுவிடுவேன். அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால் இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்கள் உடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன்.
நான் எப்படி சூட்டிங் வர்றானு பார்க்கிறான் என சொல்கிறார்கள். அவர்களே தயாரிப்பாளராக்கியதே நான் தான். வீட்டைவிட்டு எதுவும் இல்லாமல் வந்தவன் நான். இன்று நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கில் வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். என் தாய் Cyber புல்லிங் என்று நிற்கிறதோ? ஒரு பெண் என்னை புரிந்துகொண்டு வந்தார். இப்போது அவரையும் (கெனிஷா) காலி செய்து அனுப்பிவிட்டார்கள். நான் பார்க்காத நடிகைகளா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதில் அழகான பெண்கள் பின்னால் எப்படி செல்ல முடியும்.
என் பசங்களுக்காக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அப்பா அம்மா அந்த பெண் வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா? வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப்போவதில்லை. என்னை அடிமையாக வைத்திருந்தார்கள். கையை அறுத்துக்கொண்டு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தார்கள். மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். ஏற்கனவே என் மீது பல கோடி கடன், வழக்குகள் உள்ளன.
ஆனாலும் நான் சிரித்தபடி நான் இருந்தேன். ஏஐ மூலம் எடிட் செய்து எனக்கு எதிராக பரப்புகிறார்கள். சைபர் துன்புறுத்தலால் பலர் உயிரிழந்துள்ளனர். ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் என்னை பிளாக்மெயில் செய்து என்னை அடிமையாக வைத்திருந்தனர். மனைவி ஆர்த்தி குடும்பத்தின் மருத்துவ செலவுக்காக மாதம் ரூ.25,000 அனுப்பியிருக்கிறேன். எனது பெயரில் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லை. சம்பாதித்த பணத்தை கூட என்னால் சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை. என் குடும்பத்தை கெடுத்தது மூன்று எழுத்து இட்லி நடிகைதான். செய்வதை செய்துவிட்டு பெண்ணியம் பேசுகிறார். எப்படி இப்படி எல்லாம் நடிக்க முடிகிறது என்று தெரியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.







