நல்லவர்களுக்கு உங்கள் வாக்கு செல்ல வேண்டும், பொல்லாதவர்களுக்கு போகக் கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஓட்டி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக சார்பில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மூன்றாம் முறையாக போட்டியிடுகிறார். வலங்கைமானை அடுத்த ஆவூர் பகுதியில், அவருக்கு, ஆதரவாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், நல்ல திட்டங்களை கொடுப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், நல்ல மனம் நல்ல குணம் படைத்த உங்கள் வேட்பாளர் காமராஜ்க்கு வாக்களித்தால் நீங்கள் வளர்வீர்கள் உயர்வீர்கள் என்பதில் மாற்று கருத்தே கிடையாது என்று கூறி வாக்கு சேகரித்தார். அவருடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.