சிக்கிம் மாநிலம் மே 16, 1975 அன்று இந்தியாவின் 22-வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று அம்மாநில மக்கள் சிக்கிம் மாநில நாள் ஆகக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் சிக்கிம் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “என் சகோதர சகோதரிகளுக்கு அவர்களின் மாநில தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு சிக்கிமின் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படுகிறது. மாநில மக்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.
சிக்கிம் தனது 50-வது மாநில தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடும் வேளையில் இந்த நல்வாய்ப்பு அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அந்தக் கொண்டாட்டங்களில் சிக்கிம் மக்களுடன் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிக்கிமில் நான் பெற்ற அன்பான வரவேற்பு என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். வரும் காலங்களிலும் சிக்கிமின் வளர்ச்சிப் பாதைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







