“குடிநீர் இல்லை வாஷிங்மிஷின் தருகிறார்கள்” – கமல்ஹாசன் விமர்சனம்

மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்துவிட்டு, வாஷிங்மிஷின் வழங்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்…

மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்துவிட்டு, வாஷிங்மிஷின் வழங்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் மநீம வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் பேசிய கமல்ஹாசன், பல தேர்தலுக்கு வியூகங்களை வகுத்த கொடுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தன்னுடன் இருப்பதாக கூறினார். மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையை கமல் விமர்சித்து பேசினார். வருடத்திற்கு ஆறு சிலிண்டர்களை இலவசமாக வழங்க 5 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனக்கூறிய கமல், ஏற்கனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமைக்காக, ஒவ்வொரு தமிழன் தலையிலும் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலில் நிரந்தரமான, சுகாதாரமான தண்ணீர் கிடைக்க வழி செய்துவிட்டு, பின்னர் வாஷிங்மிஷின் வழங்கலாம் என சாடினார். மேலும், கடந்த தேர்தலைப்போலவே, இந்த தேர்தலில், இவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றப்போவதில்லை எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.