முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு

மத்திய அரசைப் பார்த்து அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் இதை வெட்கத்தை விட்டு சொல்வதாகவும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர்
அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர்
தர்மலிங்கம் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக
பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில்  திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான  நேரு சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் கே என் நேரு பேசியதாவது;  இந்த கூட்டத்தின் நோக்கம் வரும் 4 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திருச்சியில் காகித தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். பின்பு தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, திருச்சியின் 3 மாவட்ட செயலாளர்கள் இணைந்து இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.  தமிழ்நாட்டில் திருச்சியில் தான் அனைத்து இடங்களையும் திமுக வென்றுள்ளது.  சிறிய தவறுகளை கூட, பாஜக சேர்ந்தவர்கள் ஊதி பெரிதாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்  தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.

இங்கே இருக்கும் எதிர்க்கட்சி அதிமுக இன்றைக்கு பிளவுபட்டுள்ளது. ஆகையால் அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.

நான் வெளிப்படையாக சொல்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன். இன்றைக்கு
இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசை பார்த்து
பயப்படுகிறார்கள்.

தற்போது திமுக எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களை திமுக கைப்பற்ற வேண்டும். அதற்கு அனைவரும் நாம் உழைக்க வேண்டும்.  திருச்சி என்ன நினைக்கிறதோ அதுதான் தமிழ்நாட்டின் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும் என்றார் அமைச்சர் கே.என். நேரு.

கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சில சங்கடங்கள் வருகிறது. அவற்றை
சரி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் என்று கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Web Editor

கொரோனா பரவல் எதிரொலி; ஸ்ரீவில்லிபுத்தூரில் அமலாகும் புதிய கட்டுப்பாடு!

G SaravanaKumar

+2 தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்த தூய்மை பணியாளரின் மகள்; சாலையோரம் வசிக்கும் சாதனை மாணவியின் கதை

Web Editor