பீரோ உள்ளடுக்கில் விழுந்த நகை – திருடுபோனதாக போலீசில் புகார் கொடுத்த ஐடி ஊழியர்

பீரோ உள்ளிடுக்கில் நகை தவறி விழுந்து மறைந்திருப்பதை பார்க்காமல் ஐடி ஊழியர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.  சென்னை எம்ஜிஆர் நகர் புகழேந்தி தெருவில் வசித்து வருபவர் தனியார் ஐடி நிறுவன ஊழியர் சரவணன். காவல்…

பீரோ உள்ளிடுக்கில் நகை தவறி விழுந்து மறைந்திருப்பதை பார்க்காமல் ஐடி ஊழியர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். 

சென்னை எம்ஜிஆர் நகர் புகழேந்தி தெருவில் வசித்து வருபவர் தனியார் ஐடி நிறுவன
ஊழியர் சரவணன். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வீட்டில் உள்ள
பீரோவில் வைக்கப்பட்டிருக்கும் சுமார் 130 சவரன் நகை கொள்ளை போயிருப்பதாகாவும், கொள்ளையர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு இன்று காலை புகார்
அளித்தனர்.

இதனையடுத்து உயர் அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீட்டை சுற்றியுள்ள  அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவான  காட்சிகளை  ஆய்வு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் கைரேகை
நிபுணர்களும் வீட்டிற்கு வந்து பீரோ ,வீட்டு கதவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில்
ஆய்வு செய்துள்ளனர்.

இவ்வாறாக போலீசார் நகையை யார் கொள்ளை அடித்து இருப்பார்கள் என பல்வேறு கோணங்களில்  தீவிரமாக அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்வதற்காக துரிதமாக செயல்பட்டனர். இருப்பினும் அனைத்துவித சோதனைகள் மற்றும் விசாரணை, சிசிடிவி காட்சிகள், கைரேகைகள் ஆகியவற்றை தொடர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் கொள்ளை நடந்ததற்கான  எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

இதனால் வீட்டில் உள்ளவர்களே திருடியிருக்கலாமா என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது. வீட்டில் நகை வைத்துள்ள பீரோவை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து பார்த்தபோது, தனியாக வைக்கப்பட்ட ரகசிய அறைக்கு உட்புறமாக உள்ள பீரோ பக்கவாட்டிற்கு இடையே நகை தவறி விழுந்து இடுக்கில் கிடப்பது தெரியவந்தது.

இதனை கவனிக்காமல் போலீசாருக்கு புகார் வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறை கிட்டதட்ட 4 மணி நேரம் பலகட்ட விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.