அசாமில் உள்ள நாகோனில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் 5000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நில நடுக்கத்தால் பலி எண்ணிக்கை 30,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில் அந்த இன்று அசாம் மாநிலத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை சரியாக 4.18 மணிக்கு அசாம் மாநிலம் நாகோனில் நிலநடுக்கத்டின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நாகோனில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை மத்திய அரசின் நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து மத்திய அரசின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், ‛‛இன்று மாலை 4.18 மணிக்கு அசாமின் நாகோனில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4 என்ற அளவில் அதிர்வுகள் பதிவாகி உள்ளது” என கூறப்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கத்தால் அசாமில் சேதம், உயிரிழப்பு போன்ற எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் நேற்று மதியம் சரியாக 3.17 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று அசாமின் நாகோனில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 4ஆம் தேதி காலை 6.14 மணிக்கும ணிப்பூரின் உக்ருல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
– யாழன்