ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த துறையின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017- ஆம் ஆண்டு முதல் போட்டியை நடத்தி வருகிறது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவ்வப்போது அது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது இந்தியாவில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என மக்களவை உறுப்பினர் ரவனீத் சிங் பிட்டு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கிராமப்புற மற்றும் பழங்குடியினரை ஊக்குவிக்கும் “கேலோ இந்தியா” திட்டத்தின்கீழ் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய அரசு இத்திட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த அமைச்சகத்தின் கீழோ அங்கீகரிக்கவில்லை. மேலும், மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.
பி.ஜேம்ஸ் லிசா