தமிழகம் பக்தி செய்திகள்

நஞ்செய் இடையார் அக்னி மாரியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கும் விழா!

பரமத்தி வேலூர் நஞ்செய் இடையார்  அக்னி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல் பரமத்தி வேலூரையடுத்த நன்செய் இடையாரில் பிரசித்தி பெற்ற  அக்னி மாரியம்மன் கோயில்  தீ குண்டம் இறங்கும் திருவிழா, கடந்த 12-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. திருவிழாவில், அக்னி மாரியம்மன் கோயில் முன்பு உள்ள  கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பக்தர்கள் தினந்தோறும் புனித நீர் ஊற்றி வழிபட்டு, தொடர்ந்து ஒவ்வொரு நாளும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படும் தீ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, மாலை 3 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதற்காக, கோயில் முன்பு சுமார் 62 அடி நீளமுள்ள குண்டம் அமைக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக நின்று, ஒவ்வொருவராகக் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில்  பெண்கள் பூ போடும் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து இரவு வாண வேடிக்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கிடா வெட்டும் நிகழ்வு, மாவிளக்கு பூஜை, அழகு போடுதல், அக்னிசட்டி எடுத்தல்  ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வரவு – செலவு கணக்கை தாக்கல் செய்த விஜயபாஸ்கர்

EZHILARASAN D

மியான்மரில் மோக்கா புயலுக்கு இதுவரை 81 பேர் உயிரிழப்பு!!

Jeni

ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு இடஒதுக்கீடு முறை வரவேற்கத்தக்கது: அமைச்சர் மெய்யநாதன்

Vandhana