கூட்டணியில் பெரிய கட்சி என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு தருவது எங்களது கடமை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு கூட்டணி என்றால் அதற்கு மரபு இருக்கிறது. இடைத்தேர்தல் என்பது ஒரு கட்சியின் பலத்தை பார்க்கக்கூடிய அளவுகோல் அல்ல. கூட்டணி தர்மப்படி நடக்கும் போது தான் அது கண்ணியம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். அதே நேரத்தில் எதிர் அணியில் பார்த்தால் திமுக, காங்கிரஸ் பலம் வாய்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி பணத்தை தண்ணீரைப் போல் செலவு செய்வார்கள். 350 கோடி ரூபாய் அளவிற்கு தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் செலவு செய்துள்ளனர். திமுக தேர்வு குழுவை பார்க்கும் போதே தெரிகிறது. எந்த அளவிற்கு அவர்கள் வேலை செய்வார்கள் என்று. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியை பொருத்தவரை அங்கு மூன்று அமைச்சர்கள் இருக்கின்றனர்.
பாஜகவை பொருத்தவரை எந்த குழப்பமும் இல்லை. பெரிய கட்சி அதிமுக தான். அதிமுகவில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் பலமுறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவில் விருப்பம் இருப்பவர்கள், விருப்ப மனு கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஓபிஎஸ் அவர்களும் பாஜக அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார். நிற்க கூடிய வேட்பாளர் முழு தகுதி வாய்ந்தவர் ஆக இருக்க வேண்டும். பணபலம் – படைபலம் உள்ளிட்டவை இருப்பவராக இருக்க வேண்டும். அவர் பின்னால் அனைவரும் அணிவகுத்து நிற்க வேண்டும். இதுதான் கட்சியினுடைய முடிவு. என்னுடைய முடிவு.
பெரிய கட்சி என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இதற்கு முன்னர் அங்கு பலர் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு தருவது எங்களது கடமை. இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நேரம் இருக்கிறது. தலைவர்கள் இருக்கிறார்கள். நிற்கக்கூடிய வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு எல்லா விதமான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது கூட்டணியுடைய கடமை.
ஈ.வி.கேஸ் இளங்கோவன் அவர்களின் பேச்சு அனைவருக்கும் தெரியும். அவர் நிற்கக்கூடிய பகுதியில் உள்ள மாவட்ட செயலாளர் அவருக்கு உறுதுணையாக இருப்பாரா என்பதை நாம் சொல்ல முடியாது. இதை நான் சொல்லவில்லை. செய்திகள் வெளியாகி வருகிறது” என்று தெரிவித்தார்.