முக்கியச் செய்திகள் உலகம் Instagram News

புவி வெப்பமாதலில் ஜவுளி துறைக்கு இருக்கும் பங்கு; நாம் அணியும் ஆடைகளுக்கு பின்னால் இத்தனை விளைவுகளா?

ஜவுளி துறையானது உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் இரண்டு சதவீதத்திற்கு மேல் பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பேஷன் துறை கிரகத்தை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் நுகர்வோர் இந்த பிரச்சனைக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கான சில முக்கிய புள்ளிவிவரங்கள் இந்த தொகுப்பில் காணலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எலன் மக்கார்தூர் அறக்கட்டளையின் கூற்றுப்படி , ஒரு ஆடை தூக்கி எரியப்படுவதர்கு முன் 7 முதல் 10 வரை அணியப்படுகிறது.

ஐ.நா நிர்ணயித்திருக்கும் 1.5 டிகிரி செல்சியஸ் புவி வெப்ப வரம்பை எட்ட வேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் நாம் வாங்க வேண்டிய புதிய ஆடையின் எண்ணிக்கை அதிகபட்ச 5  என்ற எண்ணிக்கையாக உள்ளது என ஹாட் ஆர் கூல் இன்ஸ்டிட்யூட் திங்க் டேங்க் தெரிவித்துள்ளது.

ஹாட் ஆர் கூல் கூற்றுப்படி, நன்கொடையாக அளிக்கப்பட்ட ஆடைகளின் சதவீதம் சுமார் 30 சதவீதம், குப்பை கிடங்குகளிலோ அல்லது எரியூட்டப்பட்டோ அழிக்கப்படுகிறது.

கிளீன் கிளாத்ஸ்கூற்றின்படி, ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் புதிய ஆடைப் பொருட்களின் எண்ணிக்கை 100 பில்லியனாக உள்ளது.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கூற்றுப்படி, ஆடைகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பொருளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே மறுசுழற்சிக்கு அனுப்பப்படும் பழைய துணிகள் பயன்படுத்தப்படுகிறது.

பல பேஷன் நிறுவனங்கள் பழைய ஆடைகளை புதியதாக மறுசுழற்சி செய்யலாம் என்று கூறுகின்றன. ஆனால் உண்மையில், மறுசுழற்சி செய்ய விற்க்ககூடிய துணியின் தரம் பெரும்பாலும் புதிய ஆடைகளை தயாரிப்பதற்கு ஏற்றதாக இருப்பது இல்லை.

துணிகளின் ஆயுட்காலம் அதிகரிக்க துணிகளை துவைக்க வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக உள்ளது.

20 / 20 / 20 – சராசரியாக, உலக மக்கள்தொகையில் 20 சதவிகித பணக்காரர்கள் வாங்கும் துணிகள் ஏழை மக்கள் வாங்கும் துணிகளை விட 20 சதவீதம் அதிகமால இருப்பதால்,  20 மடங்கு அதிக வெப்ப உமிழ்வை பூமியில் ஏற்படுத்துகிறது என ஹாட் ஆர் கூல் கூறுகிறது.

 

2023 – இந்த ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு ஆடைக்கும் அதன் துல்லியமான காலநிலை தாக்கத்தை விவரிக்கும் லேபிளை இணைக்க  வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஐரோப்பிய ஒன்றியமும்  பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில், ஆடை உற்பத்தி ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று எலன் மக்கார்தூர் அறக்கட்டளை மதிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

EZHILARASAN D

அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா

G SaravanaKumar

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி தடுமாற்றம்

Gayathri Venkatesan