This News Fact Checked by Newschecker Tamil
மின்சார கட்டணத்தை உயர்த்துகிறதா திமுக அரசு? உண்மை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
“திமுகவின் அடுத்த விடியல், மின்சார கட்டணம் உயர்வு” என்று குறிப்பிட்டு மின்சார கட்டண உயர்வு பட்டியல் ஒன்று அதிமுக ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மை சரிபார்ப்பு:
மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தவிருப்பதாக வைரலான தகவல் குறித்து ஊடகங்களில் செய்தி ஏதும் வந்துள்ளதா என்று தேடினோம். இத்தேடலில் இவ்வாறு எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் பட்டியலை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இத்தேடலில் பாலிமர் நியூஸின் எக்ஸ் பக்கத்தில் ‘தமிழகம் முழுவதும் மின்சார கட்டண உயர்வு விவரம்’ என்று தலைப்பிட்டு இதே பட்டியல் செப்டம்பர் 10, 2022 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் செப்டம்பர் 10, 2022 அன்று புதிய தலைமுறை வெளியிட்டிருந்த செய்தியிலும் வைரலாகும் பட்டியலில் குறிப்பிட்டிருந்த அதே கட்டண உயர்வு தகவல் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் கட்டண உயர்வு பட்டியல் 2022 ஆண்டின் பழைய கட்டண உயர்வு பட்டியல் என அறிய முடிகின்றது.
இதனையடுத்து தேடுகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் கட்டண உயர்வு பட்டியல் பழைய பட்டியல் என தெளிவு செய்து பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
கடந்த சில நாட்களாக உலா வரும் மின் கட்டண செய்திகள் பற்றிய உண்மை தன்மை:
அவை முற்றிலும் பழைய செய்தி.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை
ஆணைய எண் 07 / 9.9.2022 தேதியின் படியான கட்டண விகிதம்.It has been observed some recent tweets on tarrif and its clarified that they are based an… pic.twitter.com/pHBms79xba
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) May 9, 2024
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் 2022 ஆம் ஆண்டின் பழைய செய்தியை தற்போது நடந்ததாக திரித்து பொய்யான தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது உறுதியாகின்றது.
முடிவுரை:
மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தவிருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும். 2022 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின் உயர்வு கட்டண பட்டியலை வைத்து இத்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Note : This story was originally published by ‘Newschecker Tamil’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakthi Collective.












