ஹைதராபாத்தில் தொடங்கியது ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு – அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே…

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார். இது தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்காக அஜித் எடையை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டி ஒன்றில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.