தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே. மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
அதில், காத்திருப்புப் பட்டியலில் இருந்த கூடுதல் காவல் இயக்குநர் ஏ. அமல்ராஜ் சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக்கை மாற்றி, சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.







