தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை சுமார் இரண்டறௌ மணி நேரம் வரை நீடித்தது. அந்த பட்ஜெட்டில், சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ், வெற்ரி வீடு திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், ஜென்ஸீக்களுக்கு நவீன சிக்கிள், வெற்றி மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 9:30 மணி அளவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. இதில் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார்.
தவெகவின் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும், அதற்க்கும் மேல் உள்ளவர்களுக்கு பாதி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு 75,000 ரூபாய் வரை கடன் பெற்றவற்களுக்கு மட்டுமே முழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் இன்றைய வேளாண் பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்தி வழங்குதல், உழவர்களுக்கு உரிமைத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 24,000 வழங்கிட வேண்டும். சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 உற்பத்தி மானியம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




