#IPL2026 | குஜராத்திற்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை அணி…!

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 158 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதி வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்துள்ளது.

சென்னை அணியில் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வார்ட் 60 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். ஆனால் மறுபுறம் அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

குஜராத் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ராபாடா 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.