பஞ்சாப் : லாரியும், பிக்-அப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப்பில் லாரியும், பிக்-அப் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப்பின் பெரோஸ்பூர் நகரில் ஜங்காவாலா மோர் பகுதியருகே பெரோஸ்பூர்-பசில்கா சாலையில் லாரி ஒன்றும் ஆட்களை ஏற்றி வந்த பிக்-அப் வாகனமும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அந்த வாகனம் ஜலாலாபாத் நகரில் இருந்து பியாஸ் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் ஆற்றும் காவல்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்டு, பெரோஸ்பூர் நகரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்கள் பரீத்கோட் பகுதியில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.