எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 28 பட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த சூழலில் இன்று வெளியிட இருந்த இளநிலை நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை (ஏப். 27-ம் தேதி) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “NEET தேர்வு நுழைவுச் சீட்டுகள், 2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை காலை 10 மணிக்குள் வெளியிடப்படும். தேர்வுக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையை, ஒரு மாதிரித் தேர்வை எழுதிப் பார்க்கவோ அல்லது பாடங்களை மீள்பார்வை செய்யவோ பயன்படுத்திக்கொள்ளுங்கள்.அமைதியாக இருங்கள். போதுமான அளவு நீர் அருந்தி, உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







