ஐபிஎல் 2024 – வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் விலகல்..?

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட், ஐபிஎல்2024 தொடரின் முதல் பாதியில், பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்…

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட், ஐபிஎல்2024 தொடரின் முதல் பாதியில், பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது.  இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நாளை (டிச.19) துபாயில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: 2 நாட்களாக பெய்து வரும் கனமழை – நெல்லையில் இடிந்து விழுந்த வீடு! அதிர்ச்சி காட்சி!

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹேசில்வுட் கடந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.  அந்த அணியால் வரும் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சமீபத்தில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  இதனால் ரூ.2 கோடி  என்ற அடிப்படை விலையுடன்,  நாளை அவரது பெயர் ஏலத்தில் 2-வது செட்டில் இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் ஹேசில்வுட்  2024-ம் ஆண்டு மார்ச் மாதம்  ஹேசில்வுட்டின் மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதாகவும், அதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.