முக்கியச் செய்திகள் தமிழகம்

காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை உயிரிழப்பு

பழனி அருகே காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த சிறுத்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து யானை,சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கொடைக்கானல் சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் மயில்சாமி என்பவரது மாந்தோப்பிற்குள் சிறுத்தை ஒன்று நடமாடியதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்தனர்.

சிறுத்தை நடக்கமுடியாமல் களைப்புடன் சுற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது. சிறுத்தையின் அருகில் செல்ல முடியாததால் என்ன காயம் என்பதும்,சிறுத்தையின் உடல்நலம் குறித்தும் முழுவதுமாக தெரியவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்த முடிவெடுத்த நிலையில் சிறுத்தையின் உடல்நலம் மோசமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தினால் உயிருக்கு ஆபத்தாகலாம் என்பதால் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தாமல் சுயநினைவு உள்ளபடியே பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து பழனி தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் வலைவீசி சிறுத்தையை பிடித்தனர். சிறுத்தையும் எவ்வித சிரமமும் கொடுக்காமல் எளிதாக பிடிபட்டது. பிடிபட்ட சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் காயமடைந்து நடக்க முடியாமல் சிறுத்தை களைப்புடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதயடுத்து, தீயணைப்பு உதவியுடன் பிடிக்கப்பட்ட சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Advertisement:

Related posts

தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்

Saravana Kumar

யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்!

Niruban Chakkaaravarthi

ஆண்டாள் சர்ச்சை: வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை திரும்பப் பெற்றார் வைரமுத்து

Vandhana