தமிழகம்

மக்களை அச்சுறுத்தும் காட்டு யானை… வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்…

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, அப்பகுதி குடியிருப்பு பகுதிகள் சுற்றிதிரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானையை பூங்காவின் பின்புறமுள்ள வனப்பகுதிக்கு விரட்டினர். இரவு நேரங்கலில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக முடிவு

Halley karthi

கார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Gayathri Venkatesan

Leave a Reply