முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!

குடியாத்தம் அருகே அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நேற்று நள்ளிரவு வேலு என்பவர் வீட்டிற்குள் திடீரென புகுந்த சிறுத்தை அங்கு உறங்கி கொண்டிருந்த வேலுவின் மனைவி மற்றும் அவரது மகனை சிறுத்தை கடுமையாக தாக்கியுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைவாக வந்து அவர்களை மீட்டு சிறுத்தயை வீட்டிற்குள் வைத்து பூட்டி வைத்தனர். பின்னர் வேலுவின் மனைவி மற்றும் மகனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக் அனுப்பி வைத்த நிலையில், வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரப்பரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இதற்கு முன்னர் பலமுறை சிறுத்தை இப்பகுதியில் உலா வருவதாகவும் வனப்பகுதி அருகில் உள்ள ஆடு, மாடுகளை அவ்வப்போது சிறுத்தை தாக்கி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் வனத்துறையினர் இதுகுறித்து எவ்வித கடுமையாக நடவடிக்கையும் எடுப்பதில்லை என வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம மக்களின் புகாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி

Gayathri Venkatesan

தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிய கிராம மக்கள்!

”தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ காவலர்களே காரணம்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya