டாஸ் வென்று பேட்டிக் தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 272 ரன்கள் குவித்துள்ளது. எனவே இந்தியாவிற்கு இலக்கு 273 ரன்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை சென்னை சேப்பக்கத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்திய – ஆப்கானிஸ்தான் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆட்டத்தின் 6.4 ஓவரில், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் இப்ராஹிம் சத்ரன் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. முதல் விக்கெட்டின் போது அணியின் ஸ்கோர் 32 என இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பவர் ப்ளே முடிந்த பின்னர் பந்து வீசிய ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஹ்மத் ஷா 16 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்கூர் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். 21 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸ் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தினார். 25 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் அரை சதம் விளாசி 62 ரன்கள் எடுத்து அஸ்மத்துல்லா உமர்சாயை கிளீன் போல்டு ஆக்கினார் ஹர்திக் பாண்ட்யா.
பின்னர் 80 ரன்கள் அடித்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா விக்கெட்டை தூக்கிய குல்தீப் யாதவ் எடுத்தார். தொடர்ந்து 44வது ஓவரில் சத்ரன், முகமது நபி ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார் பும்ரா. தொடர்ந்து ரஷித் கான் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. எனவே இந்தியாவிற்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!